கடந்த சில ஆண்டுகளாக மனதில் ஒரு ஏக்கம். அது, தமிழர்களுக்கே உரித்தான திருநாள் வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் வருவதுதான். "Happy Tamil New Year மச்சி" என்பது நாகரிகம் ஆகி விட்டது போலும். சரி, தமிழ் புத்தாண்டு கொண்டாடும் நாள் அறியா சமூகத்தை சேர்ந்த நமக்கு வாழ்த்து எம்மொழியில் வந்தால் என்ன வென்று மனதை தேற்றி கொண்டேன்.
2012 ம் தமிழ் புத்தாண்டு சற்றே மாறுபட்ட வாழ்த்துடன் தொடங்கியது.
உடன் பணி புரியும் நண்பர் ஒருவர் கை குலுக்கி "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் " என்ற போது மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது. நண்பர்களே, தமிழ் புத்தாண்டு வாழ்த்தை தமிழில் கூறுங்கள்!!!